27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாவகச்சேரியில் போலியான அனுமதிப் பத்திரத்துக்கு மணல் கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்தியை அண்மித்த  பகுதியில் போலியான அனுமதிப் பத்திரத்துடன் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்துமுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றுமுந்தினம் கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  சென்ற டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போதே போலியான அனுமதிப் பத்திரத்துடன் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றமை தெரிய வந்ததாகவும் இதையடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாக தீபன் திலீபனின் முதல் நாள் நினைவேந்தல்

User1

வீட்டு வேலைக்குச்சென்ற முதல் நாளிலேயே 85 இலட்சம் ரூபா நகைகளை ஆட்டையப்போட்டு ஓடித்தப்பிய பெண்

User1

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது !

User1

Leave a Comment