உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுக்கு சம்மாந்துறை மாணவி தகுதி.!

இலங்கை செய்திகள் 14 நிமிடங்கள் முன்
29 பார்வைகள்

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் – 2026 (International English Olympiad – IEO) போட்டியின் முதலாம் சுற்றில் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்த சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி, உலக இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

குறித்த கல்லூரியில் தரம் 7 இருமொழிப் பிரிவில் கல்வி கற்று வரும் எம்.என். அப்தா அஷ்கரியே இச்சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் இணையவழியாக நடத்தப்பட்ட முதலாம் சுற்றுத் தேர்வில், ஜூனியர் பிரிவில் பங்கேற்று அதிக மதிப்பெண்களைப் பெற்று அவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 2026 டிசம்பர் 27 முதல் 29 ஆம் திகதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இறுதிச் சுற்றில் (World Final 2026) அவர் பங்கேற்கவுள்ளார்.

இதனுடன் இணைந்ததாக சிங்கப்பூர் நகரைச் சுற்றிப் பார்வையிடுவதற்கும் ஒரு நாள் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் இச்சாதனைக்கு பாடசாலை சமூகத்தினரும் பெற்றோரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் படகு கைப்பற்றல்; ஏழு பேர் கைது.!

தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கடத்திச் சென்ற…

25 0 0
இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல்.!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை, தீருவில் சதுக்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள நிலையில், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொதுத் தூபியில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கம் போன்றே மாணவர்கள், விரிவுரையாளர்கள்…

36 0 0
இலங்கை செய்திகள்

தாயகம் எங்கிலும் இன்று மாவீரர் நாள்.!

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழீழ இலட்சியத்துக்காகவும் தமது இறுதி மூச்சுவரை போராடிக் களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள்…

56 0 0