இன்றைய ராசி பலன்கள் – 27.11.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமையும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். இதுநாள் வரை மனதில் தேக்கி வைத்திருந்த ஆசை, காதல் அனைத்தையும் வெளிப்படுத்துவீர்கள். இதமான அனுபவத்தை இந்த நாள் உங்களுக்கு கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். பண கஷ்டம் தீரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். வீண் விரைய செலவுகளால் சேமிப்பு கரைய வாய்ப்பு உள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத புது மனிதர்களது பேச்சை நம்ப வேண்டாம். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருக்கும் நிம்மதியை விடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். எவ்வளவு கோபம் வந்தாலும் நிதானத்தை இழக்கக் கூடாது. இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன சிக்கல்கள் வந்து போகும். உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி, நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நிதி நிலைமை சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். காரிய தடை விலகும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையை பொறுத்தவரை பெரிசாக பாதிப்புகள் இருக்காது. இருந்தாலும் உங்களுடைய கடமைகளை நீங்களே செய்து விடுங்கள். உங்கள் பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடன் இருப்பவர்களால் தொல்லை வரும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நிதானம் தேவை. கடனுக்கு எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சுப செலவுகள் ஏற்படும். சுப காரிய தடை வீட்டில் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். இறைவழிபாடு சந்தோஷத்தை இரட்டிப்பாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வருமான உயரும். மனம் சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். இறைவழிபாடு செய்வது மேலும் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். நேரத்திற்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் நேரம் போவதே தெரியாது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணையை கை பிடிக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன பயத்தோடு பதட்டத்தோடு இருப்பீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எந்த இடத்திலும் பொய் சொல்லி தப்பிக்க வேண்டாம். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் உண்மையை பேசிவிடுங்கள். நேர்மை உங்களைக் காப்பாற்றும். இன்றைக்கு சொல்லக்கூடிய உண்மை, எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினையிலிருந்து உங்களை காப்பாற்றும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மன சஞ்சலங்கள் நீங்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உடன் வேலை செய்பவர்களால் இருந்து வந்த தொல்லை ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த நல்லது நடக்கும்.


