பயங்கரவாதப் பட்டியலில் திருத்தம் – புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களை உள்ளடக்கி, 2013ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சினால் புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தலிபான், அல்-கொய்தா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் புதிதாக எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


