ஆர்ப்பாட்டம் செய்தாலும் எதனையும் அடைய முடியாது! – ஜனாதிபதி கருத்து
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்குப் பின்னால் எதிர்க்கட்சியின் அரசியல் குழுக்கள் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சத்தமிட்டாலும் அரசாங்கத்திடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னரே தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (26) நடைபெற்ற ‘பாதீட்டுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ என்ற தொனிப்பொருளிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னரே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


