உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நெடுந்தீவுக்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் கடல்வழியே பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டது!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கடல் வழியாகக் பாரிய படகு மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு கொண்டுசெல்லப்பட்ட எரிபொருள், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்துவதற்கான முக்கியமானதொரு கட்டம் எட்டப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட சிரமம் இருந்து வந்தது. இதற்காகத் தீவிலிருந்து குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதுடன், போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் மக்கள் எதிர்கொண்டனர்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அங்கு முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டு வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளமை, நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நனவாக்கும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அவசர மருத்துவத் தேவைகள், கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இது துணைபுரியும்.

தீவுப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் மற்றுமொரு அடையாளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உரும்பிராய் சிவகுமாரன் சிலையடியில் 72 பிடி அரிசியிட்டு பொங்கல் பொங்கி தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட உரும்பிராய் சிவகுமாரன் சிலையடியில் தலைவர் பிரபாகரனின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பொங்கல் பொங்கி, கேக் வெட்டி…

1 0 0
இலங்கை செய்திகள்

JICA திட்டத்தின் மூலம் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு வாகனங்கள் வழங்கிவைப்பு

யப்பான் நாட்டின் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை திட்டம் (JICA)திட்டத்தின் மூலம் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு பேருந்து ஒன்றும் ஹயஸ் வாகனம் ஒன்றும் கையளிக்கும் நிகழ்வு யாழ்…

34 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மடு, பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காகத் தயார் நிலையில்!

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார் படுத்தப்பட்டுள்ளது. நாளைய தினம்…

27 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 32 இளைஞர், யுவதிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டத்தில்   சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு  18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி…

30 0 0