உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை.!

இலங்கை செய்திகள் 28 நிமிடங்கள் முன்
27 பார்வைகள்

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், மன்னாரில் சில உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்தவகையில், மன்னார் நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஐந்து உணவு விற்பனை நிலையங்கள் மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகரால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, சில உணவு விற்பனை நிலையங்கள் உரிய வர்த்தக அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியமை, உணவைக் கையாளும் பணியாளர்களிடம் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் உணவு தயாரிக்கும் இடங்கள் போதிய சுத்தமின்றி காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டமை, ஈக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளினால் உணவுகள் மாசுபடக் கூடிய சூழல் காணப்பட்டமை, சமைக்கப்படாத உணவுகளையும் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் முறையாகத் தனித்தனியாகச் சேமிக்காமை போன்ற குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உரிய சுகாதார முறையில் பராமரிக்கப்படாமை, கழிவுகள் மற்றும் கழிவு நீரை முறையாக அகற்றாமையால் சுற்றுச்சூழல் மாசுபடக் கூடிய நிலை காணப்பட்டமை, உணவுப் பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் மற்றும் சட்ட ரீதியான நடைமுறைகள் முறையாக பேணப்படாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளன.

பலமுறை விழிப்புணர்வுக் கூட்டங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உணவு விற்பனை நிலையங்களில் இவ்வாறான சுகாதாரக் குறைபாடுகள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவது ஒவ்வொரு உணவு விற்பனை நிலையத்தின் அடிப்படை கடமையாகும். எனவே, உணவு விற்பனையாளர்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆவரங்காலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஆவரங்கால் சர்வோதய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, அங்குள்ள நினைவுத் தூபி…

13 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் நாளை மாவீரர் நாள் நினைவேந்தல்; மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு.!

பருத்தித்துறை நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில், நகர்வாழ் மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர்…

28 0 0
இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்திய இளைஞன் கைது.!

வல்வெட்டித்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞன்…

36 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை முகாம், நேற்று புதன்கிழமை குடத்தனை வடக்கு நினைவேந்தல் வளாகத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை இரத்த வங்கியில் நிலவும் தொடர்ச்சியான குருதித்…

41 0 0