உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உந்துருளிகள் திருட்டு; நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
41 பார்வைகள்

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் உந்துருளிகளை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் 19 முதல் 39 வயதிற்குட்பட்ட ஹோக்கந்தர மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹன்வெல்ல, பாதுக்கை, கொட்டாவை மற்றும் மீகஹவத்தை பொலிஸ் நிலையங்களில் பதிவான நான்கு உந்துருளி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரும், கழற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை வைத்திருந்த வேறு இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய பொலிஸாரால் 10 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருளுடன் கடந்த சனிக்கிழமை (21) கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில், நேற்று (25) புதன்கிழமை மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் திருடப்பட்ட உந்துருளிகளின் உதிரிபாகங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆணொருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ரத்கம – மலிடுவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர்…

26 0 0
இலங்கை செய்திகள்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; வல்வெட்டித்துறையில் இன்று கேக் வெட்டி பொங்கிய எழுச்சி.!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில்…

26 0 0
இலங்கை செய்திகள்

முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்.!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது நேற்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள்…

25 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி.!

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது…

25 0 0