ஆழியவளையில் திடீரென வீசிய சூழல்காற்றினால் இரு வீடுகள் முழுமையாக சேதம்!
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று24.11.2026 பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சுழல் காற்று சூறாவளி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்ககேணி பொலிசார் மற்றும் கிராம சேவையாளர்குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






