கிளிநொச்சியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, விபத்துக்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ்.ஜீவநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, மாவட்ட தொற்றுநோய் பிரிவு வைத்தியர் எம்.ஜெயராசா, கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தைச்சேர்ந்த சட்டத்தரணிகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள்,பொலிஸ் அதிகாரி ,மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் தற்கொலை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது. தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கலந்து கொண்ட அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.


