உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
110 பார்வைகள்

டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 24.11.2026நடைபெற்றது.

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைக் கண்டறிந்து, அதனைச் சீர்செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டம அபிவிருத்திக்குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையினர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் பிரதேச செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவிக்கையில்
நிதி வழங்கல் மற்றும் வீடுகளின் நிலை: பல்வேறு காலங்களில் நிவாசம் அமைப்பதற்கான நிதிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு முறையான கணக்குகள் கொடுக்கப்படவில்லை; பலரும் தங்களின் வீடுகளைப் பாதியிலேயே அமைத்துள்ளனர். மேலும், 2018 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ரூ. 20,000, ரூ. 30,000, ரூ. 40,000, ரூ. 50,000 என தவணை முறையில் பணம் வழங்கப்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தெரிவுகள்: யுத்தத்தினால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த மக்களில் 586 பேருக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் வழங்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், வீடுகளை பாதியில் கட்டிய வீடுகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
புதிய வீட்டுத் திட்டங்கள்: டித்வாவினால் பாதிக்கப்பட்ட 617 குடும்பங்களுக்கு ரூ. 1.5 இலட்சம் வழங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1,800 வீடுகளுக்கு தலா ரூ. 20 இலட்சம் நிதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 3,000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டங்களுக்கான முறையான மற்றும் துல்லியமான வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க விவாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டங்கள்: வரவிருக்கும் ஆண்டில் (அதாவது இன்னும் 1.5 ஆண்டுகளில்) கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அதனை முறைப்படி செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கிரேட்டர் கிளிநொச்சி (Greater Kilinochchi) குடிநீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 1,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24)…

108 0 0
இலங்கை செய்திகள்

ஆழியவளையில் திடீரென வீசிய சூழல்காற்றினால் இரு வீடுகள் முழுமையாக சேதம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று24.11.2026 பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால்…

115 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஜனாதிபதியின் 58 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் 58வது பிறந்தநாள் இன்று 24.11.2026 கொண்டாட்டம் கிளிநொச்சி புன்னை நீராவி கிராம இளைஞர்களால் கேக் வெட்டியும் பட்டாசு கொளுத்தி…

111 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, விபத்துக்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி…

118 0 0