உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 21 நிமிடங்கள் முன்
90 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து, சாகாமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் இரண்டும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று மாலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இத்துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான தீவிர விசாரணைகளை திருக்கோவில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் அவரது உதவியாளர்கள் கைது.!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

133 0 0
அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை…

113 0 0
அம்பாறை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

147 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

162 0 0