உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
114 பார்வைகள்

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதாக அமைந்துள்ளன.

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பதன் மூலம், மக்களின் ஜனநாயக உரிமைகள் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டுள்ளன என்பதைத் தொல்.திருமாவளவன் அழுத்தமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

ஜனநாயகத்தின் ஆணிவேரே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை 2018 இலும், பின்னர் 2023 இலும் நடத்தாமல் முடக்கி வைத்துவிட்டு, 2026ஆம் ஆண்டிலும் ஆளுநர்களின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் குவித்து வைத்திருப்பது எதேச்சாதிகாரத்தின் உச்சம்.

“சட்டச் சிக்கல்கள், தேர்தல் முறைமைத் திருத்தங்கள்” என்ற நொண்டிச் சாக்குகளைக் கூறிக்கொண்டு, மக்களின் வாக்குரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் போக்கை இனியும் சகித்துக்கொள்ள முடியாது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைத்த அரைகுறை அதிகாரப் பரவலாக்கலான மாகாண சபை முறைமையைக் கூட, தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறார்கள் என்ற திருமாவளவனின் குற்றச்சாட்டு அப்பட்டமான உண்மையே.

அதிகாரமற்ற பதவிகளுக்குக் கூடத் தமிழர்கள் வந்துவிடக் கூடாது என்ற இனவாதச் சிந்தனையின் வெளிப்பாடே இந்தத் தேர்தல் முடக்கம்.

மேலும், உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புச் சட்டம், ஒற்றையாட்சி எனும் இரும்புப் பிடியை மேலும் இறுக்கி, சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாஷைகளை நசுக்கும் ஆயுதமாகவே அமையும் என்ற அவரது எச்சரிக்கையை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் முறையிட்டு, டில்லியின் அழுத்தத்தைக் கொழும்பு மீது பிரயோகிக்கப் போவதாகத் திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்தங்களைக் காற்றில் பறக்கவிட்டு, தனது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு, அண்டை நாடான இந்தியாவின் தலையீடு மிகவும் அவசியமாகின்றது என்பதையே இது காட்டுகின்றது.

நொண்டிச் சாக்குகளைச் சொல்லித் தேர்தல்களைத் தள்ளிப்போடுவது கோழைத்தனமான அரசியல். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது பற்று இருக்குமானால், முடக்கி வைக்கப்பட்டுள்ள சட்டத் தடைகளை உடனடியாக உடைத்தெறிந்து, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும். இல்லையேல், உள்நாட்டு மக்களின் எழுச்சிக்கும், சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தத்துக்கும் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

107 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

116 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

119 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

108 0 0