உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

116 பார்வைகள்

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கும், போஞ்சி 450 ரூபாய்க்கும், பூசணிக்காய் (வட்டக்காய்) 400 ரூபாய்க்கும், வாழைக்காய் 400 ரூபாய்க்கும், கோவா 600 தொடக்கம் 650 ரூபாய் வரையிலும், வெள்ளரிக்காய் 350 ரூபாய்க்கும், தக்காளி 800 ரூபாய்க்கும், பாகற்காய் 800 ரூபாய்க்கும், புடலங்காய் 600 ரூபாய்க்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு 450 ரூபாய்க்கும், கறிமிளகாய் 950 தொடக்கம் 1,000 ரூபாய் வரையிலும், கரட் 600 தொடக்கம் 700 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், ஒரு கிலோகிராம் தேசிக்காய் 2,000 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 800 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பெய்த பலத்த மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கேள்விக்கு ஏற்ற நிரம்பலை வழங்க விவசாயிகளால் முடியாமல் போயுள்ளமையே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதாகவும், இதனால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24)…

108 0 0
இலங்கை செய்திகள்

ஆழியவளையில் திடீரென வீசிய சூழல்காற்றினால் இரு வீடுகள் முழுமையாக சேதம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று24.11.2026 பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால்…

115 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஜனாதிபதியின் 58 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் 58வது பிறந்தநாள் இன்று 24.11.2026 கொண்டாட்டம் கிளிநொச்சி புன்னை நீராவி கிராம இளைஞர்களால் கேக் வெட்டியும் பட்டாசு கொளுத்தி…

111 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, விபத்துக்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி…

118 0 0