மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!
உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பல வாரங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார்.
விஎஸ் பாபு மறைவால் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலத்தில் தவெக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மேலும் தவெக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அடுத்த ஒரு வாரத்திற்கு தவெக சார்பில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


