பலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை வளாகத்தில் கூடாரம் அமைத்து புத்தர் சிலையை நிறுவிய வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


