உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறீதரன் எம்.பியை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல். திருமாவளவன்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
84 பார்வைகள்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அமரர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது யாழ். இல்லத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் தற்கால வாழ்க்கை நிலை, அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தொல்.திருமாவளவன் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமிகள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு ஹோம திரவியங்கள் இடப்பட்டு…

83 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

அக்வான் புயலின் தாக்கம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல் மற்றும்…

78 0 0
இலங்கை செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை வளாகத்தில் கூடாரம் அமைத்து…

70 0 0
இலங்கை செய்திகள்

டிசம்பர் மாதம் 45,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக…

78 0 0