உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

அக்வான் புயலின் தாக்கம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்ட தரவுகளின்படி, பொரளை பகுதியில் காற்று மாசுபாடு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அங்கு காற்றுத் தரக் குறியீடு 193 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது சுகாதாரத்திற்கு ஆபத்தான நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை, மன்னார், வவுனியா மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 151 முதல் 200 வரையிலான பாதகமான மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் காற்றின் தரம் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர் அஜித் குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் அக்வான் புயல் காரணமாக, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, இம்மாதம் 20ஆம் திகதியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கரையோரப் பகுதிகள் ஊடாக மிகத் தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமிகள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு ஹோம திரவியங்கள் இடப்பட்டு…

82 0 0
இலங்கை செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை வளாகத்தில் கூடாரம் அமைத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

டிசம்பர் மாதம் 45,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக…

78 0 0
இலங்கை செய்திகள்

மாத்தளையில் நண்பர்கள் இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மரணம்!

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்ததாகத் தகவல்கள்…

65 0 0