உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
34 பார்வைகள்

சாட்டி மாவீரர் நினைவிடத்தில் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காணி உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு இன்று (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றில் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை என எதிராளிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், தமது தரப்பு நியாயங்களையும் மன்றில் எடுத்துரைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய சட்டப்பிரிவு குறிப்பிடப்படாத நிலையில் குறித்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டி, வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், குறித்த விடயம் மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன், ஸ்ரீராகவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமிகள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு ஹோம திரவியங்கள் இடப்பட்டு…

84 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

அக்வான் புயலின் தாக்கம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல் மற்றும்…

79 0 0
இலங்கை செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை வளாகத்தில் கூடாரம் அமைத்து…

70 0 0
இலங்கை செய்திகள்

டிசம்பர் மாதம் 45,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக…

78 0 0