உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஏதிலிகளை நாடு கடத்த ருவாண்டாவில் விசேட மையம் – ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடவடிக்கை!

உலக செய்திகள் 15 மணி நேரம் முன்
97 பார்வைகள்

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஏதிலிகளை நாடு கடத்தும் நோக்கில், ருவாண்டாவில் விசேட மையமொன்றை அமைக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

ஜேர்மனி, டென்மார்க், ஒஸ்திரியா, கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த மையத்தை நிர்வகிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மையம் 2027ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் உள்ள குடியேற்றவாசிகள் இந்த மையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.

அங்கு அவர்கள் ருவாண்டா சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், விரும்பினால் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளின்போது சுமார் 100 ஏதிலிகளை தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மனித உரிமை மீறல்கள் ஏற்படக்கூடும் என மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

90 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

88 0 0
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயி@ரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸ்வீட்வாட்டர்ஸ்…

89 0 0
உலக செய்திகள்

காடுகள், களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம்!

ஹங்கேரியின் முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பானின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த மிக்லோஷ் செஸ்டாக்கிற்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணையில், சுமார் 20 மில்லியன் அமெரிக்க…

100 0 0