அரசியலுக்காக நடிப்பைக் கைவிட வேண்டாம் : சாய்பல்லவி தனுஷிடம் கோரிக்கை
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் பயணத்திற்காக நடிப்பைக் கைவிட்டுவிட வேண்டாம் என நடிகை சாய்பல்லவி அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய், முழுநேர அரசியல் பயணம் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ‘ஓம்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தெரிவித்த சாய்பல்லவி, “விஜய் சார் அரசியலுக்குச் சென்றுவிட்டதால் இப்போது நடிப்பதில்லை.
ஆனால் தனுஷ் சார், நீங்கள் எத்தகைய முடிவு எடுத்தாலும் சினிமாவை விட்டுவிலக மாட்டீர்கள் என்றும் தொடர்ந்து நடிப்பீர்கள் என்றும் நம்புகிறேன். உங்களை நாங்கள் திரையில் மிஸ் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


