உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

சினிமா 17 மணி நேரம் முன்
130 பார்வைகள்

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் அவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது கீமோதெரபி மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் அவர், தனது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “கீமோதெரபி சிகிச்சை மிகவும் கடினமானது. ஆனால், அதைவிட நான் வலிமையானவள். இறுதிக்கட்ட ஊசி மருந்துகள் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கிய முதல் படியாகும்” எனத் தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு புற்றுநோயுடன் போராடி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் அவருக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ் நடித்த ‘வீரநடை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உமா சங்கரி, விஜயகாந்தின் ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், உமா சங்கரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

145 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

129 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

99 0 0
சினிமா

தனுஷுடன் செல்ஃபி எடுக்க முட்டிபோட்ட ரசிகர் : சர்ச்சையில் சிக்கிய நடிகர்!

நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் முட்டிபோட்டு முயற்சித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது,…

103 0 0