ருவன்வெலிசாய போராட்ட களத்தில் பதற்றம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் கைது.!
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (12) அங்கு திரண்ட பொதுமக்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு சென்ற நிலையில், அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு எதிர்ப்பு வெளியிட வந்த ராஜாங்கணைய சத்தாரதன தேரர் மீது, கஸ்ஸப்ப தேரர் குழுவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி அவருடைய காவியுடை பறித்து எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


