உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தியவர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
73 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையின்போது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மட்டக்களப்பு நகரின் முக்கிய சந்திகளில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதிகளில் பயணிக்கும் உந்துருளிகள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சாரதிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் நடமாடும் மருத்துவப் பரிசோதனைப் பேருந்து மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் மற்றும் ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், வேன் சாரதிகள், கனரக வாகன சாரதிகள், முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன சாரதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த பகுதிகளில் 141 வாகனங்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவற்றில் 23 பேர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனங்களை செலுத்தியமை கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

41 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

72 0 0
இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட…

78 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்” முறையிலான நாற்று நடுகை ஆரம்பம்.!

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர…

75 0 0