சட்டவிரோதமாக கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய நபர்கள் கைது.!
மன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று (03) நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன், கண்டல் தாவரங்களுடன் படகு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் கண்டல் தாவர சூழல் முக்கிய பங்காற்றுவதால், அச்சூழலைப் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல், வங்காலை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அகற்றப்பட்ட கண்டல் தாவர கிளைகளை கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த மூன்று (03) நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், கண்டல் தாவரங்களை ஏற்றிய நிலையில் படகு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று நபர்கள், படகு மற்றும் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கண்டல் தாவர கிளைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



