உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜட் சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
93 பார்வைகள்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தவுள்ள நிலையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே எமது அரசின் பிரதான இலக்காக இருந்தது. அதனை எமது கடந்த ஈராண்டு காலப் பகுதியில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளோம்.

எனவே, அடுத்த மூன்றாண்டுகளில் பொருளாதார அபிவிருத்தியே எமது முதன்மை இலக்காகும். அதற்குரிய திட்டவட்டமான யோசனைகள் இந்தப் பாதீட்டில் முன்வைக்கப்படும்.

பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதற்காக அனைத்து வரிகளையும் உடனடியாக நீக்கிவிட முடியாது. எனினும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்பதுடன் சில முக்கிய துறைகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்புகளும் வழங்கப்படும்.” – என்றார்.

நிதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவு – செலவுத் திட்ட உரை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பாதீட்டின் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறும். நவம்பர் 20ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும்.

டிசம்பர் 14ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்தக் காலப்பகுதியில் அரச விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்றும், அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாம் மதிப்பீட்டின் போது அரச தரப்புக்கு 60 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குழுநிலை விவாதத்தின் போது அரச தரப்புக்கு 40 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் நேரம் ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சொன்றின் செலவினத் தலைப்புத் தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த நாளின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அப்பியாசக் கொப்பிகளுக்கும் அச்சிடப்பட்ட நூல்களுக்கும் Vat வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்களும் ஏனைய அச்சிடப்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

68 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்…

74 0 0
இலங்கை செய்திகள்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

58 0 0