ஐ.பி.எல். தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐ.பி.எல். அணிகளுக்கு இடையிலான வீரர்கள் பரிமாற்றத்தின் ஊடாக அணிகளை மாற்றியுள்ளனர்.
இதன்படி, ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இணைந்துள்ளனர்.
இதற்கு முன்னர் 16.5 கோடி இந்திய ரூபாயாக இருந்த அவரது ஒப்பந்தத் தொகை, தற்போது 18 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பெற்றுவந்த 18 கோடி இந்திய ரூபாய் ஒப்பந்தத் தொகையிலேயே அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
இரு நட்சத்திர வீரர்களின் இந்த அணிமாற்றம் ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


