உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

விளையாட்டுச் செய்திகள் 9 மணி நேரம் முன்
96 பார்வைகள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் மூன்று போட்டிகளுக்கு சுப்மன் கில் அணி தலைவராகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை அணி தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்க உள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய அணி இரண்டு கட்டங்களாக விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகளும் நவம்பர் 4, 7 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறுகின்றன.

இதையடுத்து நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துவார்.

இந்த இரண்டு போட்டிகளும் நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுய் மைதானத்தில் நடைபெற உள்ளன.

சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதால், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். இதனால் இந்திய அணியின் தலைவர் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை அணி தலைவராக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

எனது அணி இனி பஞ்சாப் – ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ள இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட்…

97 0 0
விளையாட்டுச் செய்திகள்

தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மகளிர் அணி.!

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய கால்பந்து போட்டியில் தேசிய மட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தேசிய ரீதியில் நடைபெற்ற…

105 0 0
விளையாட்டுச் செய்திகள்

மஹேல ஜயவர்தனவுக்கு நாலந்தா கீர்த்தி ஸ்ரீ விருது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவுக்கு, கிரிக்கெட் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி மதிப்புமிக்க ‘நாலந்தா கீர்த்தி ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.…

87 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல். தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐ.பி.எல். அணிகளுக்கு இடையிலான வீரர்கள் பரிமாற்றத்தின் ஊடாக அணிகளை மாற்றியுள்ளனர். இதன்படி,…

69 0 0