இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!
கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய கடலோர காவல் படை அவர்களை மீட்டு தற்போது மண்டபம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாவல் படை தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழ்நாடு கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெனோஜன் மற்றும் டிவோஜன் ஆகிய இளைஞர்கள் ஆவர்.


