யாழில் நான்கு வயது சிறுமி மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்.!
யாழ்ப்பாணத்தில் நான்கு வயது சிறுமி மீது ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கியதால் மாணவியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர்மட்ட தலையீடு காரணமாக அவர் நேற்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


