உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் : வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
91 பார்வைகள்

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கையாளும் சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

இதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை இணைத்து முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்பாகத் திரட்டப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையில் முன்னளிப்பு ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், உணவு உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானோர் இதுவரை முறையான பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது, குறிப்பாகத் தொடக்கநிலையில் உள்ள உற்பத்தியாளர்களிடையே உரிய நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போதியளவில் இல்லாமை முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டது.

உணவு உற்பத்தியாளர்கள் வியாபார உரிமம் பெறுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களை அணுகும்போதே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றுக்கு அமைவாக உற்பத்தி நிலையங்களை அமைத்துச் செயற்படுவதன் மூலம் பின்னர் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும் எனக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை ஒழுங்குகளை நிறைவு செய்த பின்னரே சில உற்பத்தியாளர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் அனுமதி கோருவதால், உரிய சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படாத சந்தர்ப்பங்களில் அனுமதி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தொழிலை ஆரம்பிக்கும் கட்டத்திலேயே உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடாக உணவு உற்பத்தியாளர்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுவருவதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய முயற்சிகளை வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக ஒருங்கிணைத்து, மாவட்ட ரீதியாக உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் தமது ஆட்சிப் பகுதிக்குள் வாழ்வாதார நோக்கில் அல்லது சிறிய மற்றும் நடுத்தர அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் அவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது முன்னெடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, பிரதேச செயலகங்கள் ஊடாக வணிக நிறுவனப் பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது காணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக உரிய அறிவுறுத்தல்களை மீள வழங்கி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் போசாக்குத் தரம் மற்றும் சுகாதாரத் தன்மை ஆகியனவும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட பிராந்திய உதவிப் பணிப்பாளர், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தொழிற்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட அலுவலர்கள், சிரேஷ;ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வடக்கு மாகாண வணிக சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

81 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

94 0 0