முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம்.!
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலையருகில் இன்று(10) இடம்பெற்றது.
அமரர் ரவிராஜின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன், சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அமரர் ரவிராஜின் குடும்பத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
2006 நவம்பர் 10 ஆம் திகதி காலை 8.45 மணியளவில்,
கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்டவுனில் அமைந்துள்ள வீட்டிலிருந்து காரில் வெளியேறியபோது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரு ஆயுதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடராஜா ரவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்போது ரவிராஜின் பொலிஸ் மெய்ப் பாதுகாவலரான லக்ஸ்மன் லொக்குவெல்ல என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







