உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஓய்வை அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் பேசினேன் – கேன் வில்லியம்சன்

விளையாட்டுச் செய்திகள் 14 மணி நேரம் முன்
65 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘Between Two Beers’ ல் பேசிய கேன் வில்லியம்சன், “

நான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் மிகவும் அருமையான உரையாடல் ஒன்றை மேற்கொண்டேன்.

எங்களுடைய கிரிக்கெட் அனுபவங்கள், அணியை வழிநடத்திய கேப்டன்சி பொறுப்புகள், என பல விஷயங்களிலும் எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.

அவருடன் பேசும்போது கண்ணாடியில் நம்மையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு மற்றும் புரிதல் இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வரும் இருவரும், தங்களது கிரிக்கெட் பயணத்தில் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். இருவரும் தங்களது அணிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பல முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0
விளையாட்டுச் செய்திகள்

முழு உடற்தகுதியுடன் திரும்பினால் ஹர்திக் பாண்டியா தான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த…

77 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு?

இந்திய அணியுடனான போட்டித் தொடர்கள் எதுவும் திட்டமிடப்படாததால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு (ECB) 2027 ஆம் ஆண்டில் சுமார் 627 கோடி ரூபாய் நிதி…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மொஹமட் ஷமி ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மொஹமட் ஷமி, கடந்த…

91 0 0