உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 05.11.2026

ராசி பலன்கள் 5 நாட்கள் முன்
121 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்கள் சொல்லக்கூடிய பேச்சை தட்டாமல் கேட்பது நல்லது. எந்த விஷயத்தையும் அடம்பிடித்து சாதிக்காதீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எப்படித்தான் இந்த வேலையை எல்லாம் செய்யப் போகிறோமோ, என்று கஷ்டப்பட்டவர்கள், அந்த வேலையை இன்று சுலபமாக செய்து முடிப்பீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூலாகும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கையில் பணம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். தேவையில்லாத நண்பர்களோடு அனாவசியமாக வெளியில் ஊர் சுற்ற வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மனதளவில் ஏதோ ஒரு சின்ன சலனம் இருந்தாலும், உங்களுடைய வேலையில் எந்த பாதிப்பும் இருக்காது. எந்த இடத்திலும் பொய் சொல்லாதீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுங்கள். நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று உங்களுடைய பெருமைகளை பேசிப் பேசி நேரம் போவதே தெரியாது. அந்த அளவுக்கு சந்தோசம் வெளிப்படும். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு தயாராகுவீர்கள். உறவுகளை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தோடு நடக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். சிவ வழிபாடு செய்யுங்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களை விட்டு விலகும். மன நிம்மதி கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்று அன்பு பாசம் காதல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். விவசாயிகளுக்கு இருந்து வந்த நஷ்டம் இலாபமாக மாறும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்ப்புகளை சமாளிக்கும் தெம்பும் தைரியமும் இருக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து ஒதுங்க கூடாது .இறை வழிபாடு செய்யுங்கள். இன்று துணிச்சலாக செயல்படுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். உயரதிகாரிகளை பார்த்து பகைத்துக் கொள்ளக்கூடாது. சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது .

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன தைரியம் வெளிப்படும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். குழப்பங்கள் வரும் ஆனால் அந்த பிரச்சினைகளை எதிர்த்து துணிச்சலோடு போராடி வெற்றி காண்பீர்கள். கவலைப்படாதீர்கள். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமையிலிருந்து…

95 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொந்த ஊர் திரும்புவதற்கு தயாராகி விடுவீர்கள். பிரிந்த சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும்.…

99 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள்…

111 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். காரிய தடை விலகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.…

118 0 0