உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
93 பார்வைகள்

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை (Appointments) மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் இரண்டு வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி முன் பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது:

தொலைபேசி அழைப்பு மூலமாக தமது பிரதேச தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முன்னால் சேர்த்து 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நேரத்தை பதிவு செய்ய முடியும்.
(உதாரணம்: 011 2 117 116)

ஒன்லைன் (Online) முறைமை மூலமாக https://dmtappointments.dmt.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நேரத்தைப் பதிவு செய்ய முடியும்.

வாகனங்களை புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளடங்கலாக ஏனைய அனைத்து ஒருநாள் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட முறைமைகளில் ஒன்றில் நேரத்தைப் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான…

70 0 0
இலங்கை செய்திகள்

மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? : மனோ கணேசன் எம்.பி கேள்வி!

மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு உரையில் தெளிவான பதில்களை வழங்குமாறு தமிழ்…

66 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்!

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி…

77 0 0
இலங்கை செய்திகள்

ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின்…

78 0 0