உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் இன்று பெரும் கூச்சல் குழப்பம்! : சபை நடவடிக்கைகள் நண்பகல் வரை ஒத்திவைப்பு!!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
86 பார்வைகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டமையால், சபை நடவடிக்கைகள் நண்பகல் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் காலை 9.30 மணிக்குச் சபை கூடியதும், உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகவிருந்த வேளையில், எதிர்க்கட்சியினர் திடீரென சபையின் நடுவே திரண்டு அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “சபாநாயகருக்கு ஒரு வீடா, இரண்டு வீடா?”, “தலையணை எங்கே?” எனக் கூச்சலிட்டனர். இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டடன.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எழுந்த சில சந்தேகங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை சபாநாயகருடன் அவரது அலுவலகத்தில் கலந்துரையாடியிருந்தார். அதற்குச் சபையில் பதிலளிப்பதாகச் சஜித்திடம் சபாநாயகர் உறுதியளித்திருந்தார்.

எனினும், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்காமல் பிரதிச் சபாநாயகரே தலைமை தாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், “காலையில் உறுதியளித்த சபாநாயகர் பின்னர் ஏன் சபைக்கு வந்து பதிலளிக்கத் தயங்கினார்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கேள்வி எழுப்பிக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு முன்னரே சஜித் கேள்வி எழுப்பியதால், அவரைத் தொடர்ந்து பேசுவதற்குப் பிரதி சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறப்படுவதாகக் குற்றம் சுமத்தியும், சபாநாயகரின் இச்செயலுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து கோஷங்களை எழுப்பினர்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இக்களேபரங்களுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் பிரதிச் சபாநாயகர் சபையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

பின்னர், சபை நடவடிக்கைகள் மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகி, அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான…

70 0 0
இலங்கை செய்திகள்

மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? : மனோ கணேசன் எம்.பி கேள்வி!

மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு உரையில் தெளிவான பதில்களை வழங்குமாறு தமிழ்…

66 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்!

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி…

77 0 0
இலங்கை செய்திகள்

ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின்…

78 0 0