உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
87 பார்வைகள்

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.90 இலட்சம் மதிப்பிலான 245 கிலோ பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடலட்டைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தல்காரர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில் பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழக கடல் வழியாக பீடி இலைகள், மஞ்சள், கடலட்டைகள், கடல் பல்லிகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்க மத்திய, மாநில உளவுத்துறையினர், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடலட்டைகள் கடத்தப்பட இருப்பதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே சுங்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சோதனையில் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அதிகாரிகள் துரத்திச் சென்றனர்.

பிரப்பன்வலசை அருகே கடற்கரை பகுதியில் உள்ள பனந்தோப்புக்குள் வாகனத்தை விட்டுவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினார்.

இதையடுத்து வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் மூட்டை மூட்டையாக பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

வாகனத்துடன் கடல் அட்டைகளை கைப்பற்றி இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு எடைபோட்டதில் சுமார் 245 கிலோ தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.90 இலட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தப்பியோடிய நபர் யார் என்பது குறித்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லியில் தீபவளிக்கு பட்டாசு வெடிக்கலாம் : நீதிமன்றம் அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தேசிய தலைநகர் பிராந்தியப் (Delhi-NCR) பகுதியில் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் காலை 6…

97 0 0
இந்திய செய்திகள்

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயி@ரிழப்பு!

ஓமன் கடற்கரைக்கு அப்பால், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்ற அந்தக் கப்பல், ஓமன்…

91 0 0
இந்திய செய்திகள்

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்தது முரசு புயல்!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஒங்கோல் (Ongole) அருகே, இன்று (03) அதிகாலை முரசு (Murasu) தீவிர சூறாவளிப் புயல் கரையைக் கடந்துள்ளதாக இந்திய…

88 0 0
இந்திய செய்திகள்

முரசு புயலின் அச்சம் : சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

முரசு’ (Murasu) சூறாவளி காரணமாக இன்று (02) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் மொத்தம் பதினொரு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த…

91 0 0