எனது மிகப்பெரிய உத்வேகம் ஷாருக்கான்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு ‘ஜவான்’ திரைப்படத்தின் இயக்குனர் அட்லீ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அட்லீ வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், ஷாருக்கானை தனது வழிகாட்டியாகவும், நலம் விரும்பியாகவும், சினிமா பயணத்தின் மிகப்பெரிய உத்வேகமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் இணைந்து பணியாற்றிய காலங்கள் சினிமா தொழில் நுட்பங்கள் மட்டுமன்றி, வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் எளிமையாக வாழும் கலை குறித்தும் தனக்கு கற்றுக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷாருக்கானின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தைக் காண்பதற்குத் தான் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அட்லீ குறிப்பிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கு இடையிலான இந்த நட்பு மற்றும் வாழ்த்துப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


