எனது இசைக்கு நானே என்றும் முதல் விமர்சகர் – ஏ.ஆர்.ரஹ்மான் !
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசை குறித்து இணையத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
மியூசிக் கம்போசிங் பணிகள் எளிதில் முடிந்துவிடுவதில்லை என்றும், சில மெட்டுகள் காலப்போக்கில் ரசிகர்களை ஈர்க்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். “நானே எனக்கு முதல் விமர்சகர்.
நான் செய்யும் எல்லாவற்றையும் நான் விரும்பி செய்கிறேன் என்பதல்ல. ஒரு விஷயத்தை நாங்கள் ஒரே நாளில் முடிவு செய்வதில்லை மாதக்கணக்கில் அதனுடன் வாழ்கிறோம். அதற்கென்று ஒரு சிந்தனை செயல்முறை இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
சில இசைக் கோப்புகள் ஊறுகாயைப் போல பழமையாக ஆக, மேலும் சிறப்பாகும். மக்கள் முழு படத்தையும் பார்க்காமல் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள் எனவே பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைவரையும் மகிழ்விப்பது ஒரு தலைவரின் பணி அல்ல என்றும், உண்மையான இலக்கை அடைவதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.


