சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தில் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக்கு புதிய பிரிவுகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தில் புதிதாக கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு காணொளி ஒன்றின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ‘நமது வரலாற்றை அறிவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பிரிவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு மூலம் தெரியவருகிறது.
முன்னதாக சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, அதன் ஊடாகப் பல்வேறு சமூக நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் ரசிகர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தற்போது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளமை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


