உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

சினிமா 3 மணி நேரம் முன்
75 பார்வைகள்

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ (Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார்.

லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த சில காலமாக ‘அல்சைமர்’ மற்றும் டிமென்ஷியா’ ஆகிய நினைவாற்றல் பாதிப்பு நோய்களுடன் போராடி வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.

‘ஸ்டார் டிரெக்’, ‘எக்ஸ்-மென்’ மற்றும் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவர்ட், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு கலைப் பயணத்தைக் கொண்டிருந்தார்.

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) திரைப்படத் தொடர்களில் கேப்டன் ஜோன்-லூக் பிகார்ட் (Captain Jean-Luc Picard) கதாபாத்திரத்தில் நடித்து அவர் உலகப் புகழ்பெற்றார்.

ஸ்டார் ட்ரெக்’ தொடர்களில் கேப்டனாகவும், மார்வெலின் ‘எக்ஸ்-மென்’ (X-Men) திரைப்படங்களில் ‘புரொஃபெசர் எக்ஸ்’ கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதை வென்றவர்.

மேடை நாடகங்கள் முதல் ஹொலிவுட் சினிமா வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் முத்திரை பதித்தவர்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உன்னத நடிகராகவும் அவர் திகழ்ந்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ராணி எலிசபெத்தால் இவருக்கு ‘நைட்ஹூட்’  பட்டம் வழங்கி ‘சேர்’ என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு ஹொலிவுட் பிரபலங்கள், ‘ஸ்டார் ட்ரெக்’ மற்றும் ‘எக்ஸ்-மென்’ படங்களின் சக நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

திருமணம் குறித்து மனம் திறந்த சாய் பல்லவி

ஹொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர்,…

83 0 0
சினிமா

தென்னிந்திய சினிமாவில் நிறவெறி? 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனிமுத்திரையைப் பதித்த ஹோலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தென்னிந்திய சினிமா திரைப்படத் துறை குறித்துத் தெரிவித்த…

68 0 0
சினிமா

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

மறைந்த திரை உலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனத் தன் மீது பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப்பட்டு வந்த…

68 0 0
சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர்…

99 0 0