உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
80 பார்வைகள்

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 (அம்பர் எச்சரிக்கை):
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, இரத்தினபுரி, பெல்மடுல்ல, எலபாத மற்றும் ஓபநாயக்க.

எச்சரிக்கை மட்டம் 1 (மஞ்சள் எச்சரிக்கை):
காலி மாவட்டம்: தவலம, கரந்தெனிய, நியாகம, நெலுவ மற்றும் எல்பிட்டிய.
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் பலாங்கொடை.
நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை.
களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புலத்சிங்ஹள
கண்டி மாவட்டம்: உடுநுவர, யடிநுவர.
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல.

எனவே, குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் சாத்தியமான மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சித்தியால் சிறுமிக்கு நடந்த கொடூரம்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

மட்டக்களப்பில் 9 வயது சிறுமிக்கு இரும்புக் கரண்டியால் சூடு வைத்து, ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்திக்கு (25 வயது) 7 ஆண்டுகால கடூழிய…

89 0 0
இலங்கை செய்திகள்

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அக்டோபர் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70…

74 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.!

24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

95 0 0
இலங்கை செய்திகள்

சாரதிகளை இலக்கு வைத்து போ*தைப்பொருள் பரிசோதனை; மூவர் சிக்கினர்.!

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில்…

94 0 0