உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாரதிகளை இலக்கு வைத்து போ*தைப்பொருள் பரிசோதனை; மூவர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
83 பார்வைகள்

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் போதைப்பொருளைப் பயன்படுத்தி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோரை கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருள் பாவனை இன்றி பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேருந்து சாரதிகள், முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என 110 பேர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அக்டோபர் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70…

55 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.!

24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

81 0 0
இலங்கை செய்திகள்

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை.!

நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள, சர்வதேசப் பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தங்கியிருப்பது…

85 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் திருட்டு; சந்தேகநபர் கைது.!

கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர் தொடர்பில் பல இணையத்தளங்களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி…

89 0 0