உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், யூத வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவு கிடைத்துள்ளதால், அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வரை சுமார் 86 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேலின் மூன்று முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்ட கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் வலதுசாரி, தீவிர வலதுசாரி மற்றும் தீவிர பழமைவாத யூதக் கட்சிகளின் கூட்டணிக்கு 120 நாடாளுமன்ற ஆசனங்களில் 53 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 ஆசனங்கள் கிடைக்கும் எனவும், அரபு இஸ்ரேலியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு 19 ஆசனங்கள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அரபுக் கட்சிகளின் பரந்த ஆதரவு கிடைக்காவிட்டால், ஐசென்கோட் தலைமையிலான தரப்பினால் ஆட்சியமைப்பது கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பல யூத அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதால், இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் எதிர்பார்க்கப்பட்ட போட்டித்தன்மையை விட, நெதன்யாகுவுக்கு எதிரான ஐசென்கோட் தலைமையிலான தரப்பு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஆட்சிக் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறும் வரை இந்த நிலைமை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 14 பேர் உயி@ரிழப்பு!

ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஆளுகையில்…

89 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் அதிவேக தொடருந்து விபத்து : 64 பேர் ப@லி!

மத்திய ஸ்பெயினில் நேற்றைய தினம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பின்பகுதியில் அதிவேக ரயில் ஒன்று மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64…

85 0 0
உலக செய்திகள்

விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த நிலையிலும் சாதுரியமாகச் செயற்பட்டுப் பெரும்…

90 0 0
உலக செய்திகள்

மீண்டும் டொரன்டோ நகர முதல்வரானார் ஒலிவியா சௌ

கனடாவின் டொரண்டோ நகரின் முதல்வருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை…

93 0 0