உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள்!

100 பார்வைகள்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிஃபா (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோவுக்கும் (Gianni Infantino), விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் கால்பந்து விளையாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜாஸ்வர் உமர், தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் பிரசன்னா ஜெயலத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ, சர்வதேச கால்பந்து சம்மேளனம், இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நேர்மறையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இளம் கால்பந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான சரியான வழிகாட்டல்களையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நடைபெற்று வரும் பிஃபா 15 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடர் போன்ற போட்டிகள், சிறுவர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெறவும், சர்வதேச அரங்கில் தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பெருமளவில் உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த ரசிகர்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி…

106 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவுக்காக மூன்றுமுறை தங்கம் வென்றவரின் விபரீத முடிவு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில்…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

WPL ஏலத்தில் சாதனை படைத்த 15 வயது வீராங்கனை!

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில், ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வயது வீராங்கனை என்ற புதிய சாதனையை கர்நாடகாவைச் சேர்ந்த 15 வயது…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப்; இலங்கை பெண்கள் அணியினர் வரலாற்றுச் சாதனை.!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் 2026 தொடரில் அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் இலங்கை பெண்கள் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதலாவது…

82 0 0