உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது.

இன்று(25) அதிகாலை வேளையில் கிராமத்திற்குள் ஊடுருவிய இக்காட்டு யானை, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுவர்கள் மற்றும் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ள போதிலும், வீட்டிலிருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், உகன பகுதியிலும் தொடர்ந்து இடம்பெறும் இத்தகைய சம்பவங்களால் அப்பகுதி மக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் உறைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்!

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது…

85 0 0
இலங்கை செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் நோக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் பிரதமர்

கல்வி அமைப்பில் மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மனித வளங்களை இணைத்துக் கொள்வதற்கான முறைசார் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

80 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயி@ரிழப்பு : ஒருவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில்,…

78 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப்…

83 0 0