உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

தமது சொந்த நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை தொடர்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தால், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுதல், விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலம் என்பது வெறுமனே ஒரு சொத்தாக மட்டும் இல்லாமல், தமது குடும்பங்களின் வரலாறு, வாழ்வாதாரம், பண்பாடு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமையுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களின் வாக்குப் பலத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, தமிழ் மக்களின் நில உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை முன்னுரிமை அளித்து விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பலாலி மக்களின் நீண்டகால நில உரிமைப் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் வாக்குறுதிகளுடன் முடிவுகட்டாமல், உடனடி நடைமுறைச் செயற்பாடுகள் மூலம் காணி விடுவிப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது. இன்று(25) அதிகாலை வேளையில் கிராமத்திற்குள்…

72 0 0
இலங்கை செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் நோக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் பிரதமர்

கல்வி அமைப்பில் மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மனித வளங்களை இணைத்துக் கொள்வதற்கான முறைசார் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

80 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயி@ரிழப்பு : ஒருவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில்,…

78 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப்…

83 0 0