உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
68 பார்வைகள்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இன்மையால், மக்கள் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று சேவைகளைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குத் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் விரைவாக நிறுவப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 2027ஆம்ஆண்டு ஜனவரி மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

பாராளுமன்ற குழுஅறையில் 21.10.2026இன்று இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் 21.10.2026இன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென ஏற்கனவே கடந்த 02.01.2026அன்று வீடமைப்பு, உட்கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து குறித்த இருமாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவது தொடர்பில் வீடமைப்பு, உட்கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரிடமிருந்து வாய்மூல பதிலை பெறுவதற்காக கடந்த 04.02.2026அன்று என்னால் வாய்மூல விடைக்கான வினாக்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த 19.08.2026அன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதும், கடந்த 11.09.2026அன்று பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டுமெனக் கோரி பாராளுமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்று உரையாற்றும்போதும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் 21.10.2026 இன்று இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவதன் முன்னேற்ற நிலை தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அத்தோடு இலங்கையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான முகாமையாளர் அலுவலகம் இன்றிய நிலையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கான தீர்வு காணல், மாதாந்த கட்டணப் பட்டியலை சீராக்கல், நீர் பரிசோதனை, ஆய்வுகூட வசதிகள், உத்தியோகபூர்வ நிதி நடவடிக்கைகளுக்கான காசாளர் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகவும் மக்கள் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்லவேண்டிய நிலை காணப்படுவதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

எனவே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் விரைவாக நிறுவப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் ஏற்கனவே எம்மால் கடிதம்மூலம் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுவருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் இதன்போது பதிலளித்தனர்.

குறிப்பாக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முல்லைத்தீவிற்கும், கிளிநொச்சிக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏழு மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் ஏழு மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும்…

85 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம்…

74 0 0
இலங்கை செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

84 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு அனுப்பி…

88 0 0