உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எகிப்தில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதி கோர விபத்து : 13 பேர் ப@லி, 34 பேர் காயம்

உலக செய்திகள் 18 மணி நேரம் முன்
82 பார்வைகள்

எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.

கெய்ரோ – அசியுட் மேற்குப் பாலைவன நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிவேகமாக வந்த பேருந்து பார ஊர்தியின் மீது மோதியதில், பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக நசுங்கிச் சேதமடைந்துள்ளதுடன், இருக்கைகளும் சிதறிக்கிடந்துள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கிசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எகிப்து நாட்டில் முறையற்ற வாகனப் பராமரிப்பு, கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல் மற்றும் கடுமையான சட்ட அமுலாக்கமின்மை காரணமாகத் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவில் தொடரும் விரிசல்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) ஆகியோருக்கு இடையிலான…

75 0 0
உலக செய்திகள்

சவூதியைப் பாதுகாக்க விரையும் பிரித்தானிய போர் வானூர்திகள்

ஹூதி கிளர்ச்சி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக பிரித்தானியாவின் ரோயல் வான்படைக்குச் சொந்தமான ‘டைஃபூன்’…

91 0 0
உலக செய்திகள்

கடலடி இணைய கேபிள்கள் இலக்கு: ஈரான் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய…

105 0 0
உலக செய்திகள்

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று குற்றம் சாட்டினார். மேலும்,…

95 0 0