யாழில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு.!
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து நீர் இறைத்தபோது, கிணற்றுக்குள் இருந்த சாக்குமூட்டைகளில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூட்டைகளை வெளியே எடுத்துச் சோதனையிட்டபோது, அவற்றுக்குள் பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இன்று (21) நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டுத் செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



